தென்கொரியாவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு கொரிய மொழிப்பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம், 16ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்துவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.


இந்த பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் 8ஆம், 9ஆம் திகதி நடத்துவதற்க்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்த போதிலும் உள்ளூராட்சி சபை தேர்தலின் காரணமாகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பரீட்சை நடைப்பெரும் திகதி, நேரம், பரீட்சை மத்திய நிலயம், பரீட்சைமண்டபம் ஆகிய விபரங்களை ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும். இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள 50 ஆயிரத்து 730 பரீட்சார்த்திகளுக்கும் கொழும்பிலேயே பரீட்சைகளை நடத்த திட்டமிட்டுள்ளது என பணியகம் தெரிவித்துள்ளது.