தென்கொரியாவிலுள்ள ஹைஹூண்டாய் கப்பல் கட்டும் நிறுவனம் இலங்கையருக்கு மேலும் வேலைவாய்ப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் டிலான் பெரேரா சுமார் 300 இலங்கையர் பணிபுரியும் தென் கொரியா நிறுவனமான ஹைஹூண்டாய் நிறவனத்திற்கும் விஜயம் செய்தார்.

அங்கு பணிபுரியும் இலங்கையரை சந்தித்து உரையாடியதுடன் நிறுவன தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இலங்கையிலிருந்து மேலும் இளைஞர்களை வேலைவாய்ப்புக்காக சேர்த்துக்கொள்ள நிறுவனம் அயத்தமாகவுள்ளது என்றும் வாக்குறுதியளித்துள்ளனர்.

இன் நிறுவனம் மட்டுமல்லாது தென்கொரியாவில் பிரபல நிறுவனங்களுக்கும் இலங்கையரை வேலைவாய்ப்புக்காக அனுப்புவது குறித்து முக்கியஸ்தர்களுடன் அவர் கலந்துரையாடினார்.