இவ்வருடத்தில் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையையருக்கு கொரியாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இளையர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க பெற்றுருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். முதல் நான்கு மாதத்திற்குள் கோரியாவில் 1800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றதுடன் ஜுன் மாதத்தில் மட்டும் கொரிய மொழியில் தேர்ச்சி பெற்ற 1220 இளையர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுவருகின்றன. 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையை சேர்ந்த 8 ஆயிரம் இளையர் யுவதிகளுக்கு தென் கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைக்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.