இலங்கை கொரியா ஒப்பந்தம் மூலம் வடப்பகுதி தமிழ் இளையர் யுவதிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்க உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரியில் இடம்பெற்ற கொரிய வேலைவாய்ப்பு பற்றி இளையர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கும் பிரதம் விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் திலான் பெரேரா மேலும் தெரிவிக்கையில் இலங்கை- கொரிய ஒப்பந்தம் மூலம் இம்முறை வவுன்யா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளை சேர்ந்த இளையர் யுவதிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.